அரசியல் தொடர்பான கேள்வி: " No Comments' என்று பதிலளித்த ரஜினிகாந்த் | rajinikanth-says-no-comments-on-political-question

அரசியல் தொடர்பான கேள்வி: ” No Comments’ என்று பதிலளித்த ரஜினிகாந்த் | rajinikanth-says-no-comments-on-political-question


“கூலி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்- 2’ படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘ஜெயிலர்’.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (ஜெயிலர் 2) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

‘ஜெயிலர்- 2’ படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு படம் பண்ணப்போவதாக இன்று (செப். 17) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ரஜினிகாந்த் கூறியிருந்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *