1367602 Thedalweb அஸ்வினி முதல் ரேவதி வரை: ஜூலை மாத பலன்கள் @ 27 நட்சத்திரங்கள் | From Ashwini to Revathi July predictions for 27 Stars

அஸ்வினி முதல் ரேவதி வரை: ஜூலை மாத பலன்கள் @ 27 நட்சத்திரங்கள் | From Ashwini to Revathi July predictions for 27 Stars


மேஷம்: அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

பரணி: இந்த மாதம் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.

பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வர நன்மை உண்டாகும். | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 07, 08 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 22, 23, 24 | முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். நக்ஷத்ரநாதன் சூரியன் சஞ்சாரத்தால் வேளை தவறி சப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.

ரோகினி: இந்த மாதம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வை ராசியின் மீது படிவதால் உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்கு பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வரவும். பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தால் நலம் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 09, 10, 11 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 25, 26 | முழுமையான பலன்களுக்கு > ரிஷபம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

மிதுனம்: மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடைய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

திருவாதிரை: இந்த மாதம் முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வலம் வரவும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 12, 13 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 01, 27, 28 | முழுமையான பலன்களுக்கு > மிதுனம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

கடகம்: புனர்பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.

பூசம்: இந்த மாதம் எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும்.

ஆயில்யம்: இந்த மாதம் உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வருவது நன்மை தரும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 02, 03, 29, 30, 31ம் தேதிகள் | முழுமையான பலன்களுக்கு > கடகம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

சிம்மம்: மகம்: இந்த மாதம் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.

பூரம்: இந்த மாதம் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

பரிகாரம்: ஞாயிறுற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று 3 முறை வலம் வருவது நல்லது | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 04, 05, 06 | முழுமையான பலன்களுக்கு > சிம்மம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

அஸ்தம்: இந்த மாதம் திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப் படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவது நன்மை தரும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 07, 08 | முழுமையான பலன்களுக்கு > கன்னி ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

துலாம்: சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

சுவாதி: இந்த மாதம் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த மாதம் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் நவக்கிரங்களை வலம் வரவும். குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 09, 10, 11 | முழுமையான பலன்களுக்கு > துலாம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள்.

அனுஷம்: இந்த மாதம் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.

கேட்டை: இந்த மாதம் சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று முருகனை 9 முறை வலம் வருவது நல்லது | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 22, 23, 24 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 12, 13 | முழுமையான பலன்களுக்கு > விருச்சிகம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

தனுசு: மூலம்: இந்த மாதம் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தை களின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.

பூராடம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: வியாழகிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 14, 15 | முழுமையான பலன்களுக்கு > தனுசு ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

மகரம்: உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றசாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கண் நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் உண்டாகும்.

திருவோணம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 01, 27, 28 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 16, 17 | முழுமையான பலன்களுக்கு > மகரம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பண வரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

சதயம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வர வேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தணம், குங்குமம் கொடுத்து வழிபடவும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 02, 03, 29, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 18, 19 | முழுமையான பலன்களுக்கு > கும்பம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும்.

உத்திரட்டாதி: இந்த மாதம் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரேவதி: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: வியாழ கிழமை அன்று அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று குரு பகவானை வணங்கி விட்டு வரவும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 04, 05, 06 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 20, 21 | முழுமையான பலன்களுக்கு > மீனம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1367602' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *