இப்போது இந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-ன் தொடக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின் மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்து உருவானது. காட்சி மற்றும் படைப்பாற்றல் உலகில் இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும், இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்களின் AARAV STUDIOS மூலம் இத்திரைப்படப் பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்,” எனக் கூறியுள்ளார்.
மேலும் இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், “சில கனவுகள் திட்டமிடப்படுவதில்லை – அவை உள்ளுக்குள் அமைதியாக வளர்கின்றன,
ஒரு நாள், அவை வடிவம் பெறுகின்றன.
அந்த நாள் இங்கே.” என எழுதியுள்ளார்.
ஆரவின் புதிய முயற்சிக்கு திரைத்துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகராக மட்டுமல்லாமல் கார், பைக் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டி வந்த ஆரவ் தயாரிப்பாளரகாவும் புதிய அவதாரம் எடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

