ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட் பிளிக்ஸில் வெளியாக இருக்கும் “தி பாட்ஸ் ஆப் பாலிவுட்’ என்ற வெப் சிரீஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆர்யன் கான் இயக்கும் இந்த வெப் சிரீஸில் ராகவ் ஜுயால், மனோஜ் பஹ்வா, மோனா சிங், அன்யா சிங், கௌதமி கபூர், ரஜத் பேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சல்மான் கான், கரண் ஜோஹர் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த வெப் சிரீஸ் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ‘தி பாட்ஸ் ஆப் பாலிவுட்’ குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த வெப் சிரீஸில் நடித்த ராகவ் ஜுயால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.