ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் (79) உடல் நலக்குறைவால் காலமானார்.
1968-ம் ஆண்டில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (1970) என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘த காட்ஃபாதர்’ வரிசை படங்கள், ‘பிளே இட் அகெய்ன், சாம்’, ‘லவ் அண்ட் டெத்’, ‘அன்னி ஹால்’, ‘க்ரைம் ஆஃப் த ஹார்ட்’, ‘த பர்ஸ்ட் வய்வ்ஸ் கிளப்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, 2024-ல் வெளியான ‘சம்மர் கேம்ப்’ படத்தில் நடித்திருந்தார். ‘அன்னி ஹால்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இவர் பெற்றுள்ள இவர், தனது தனித்துவமான பாணியிலான நடிப்பு மற்றும் வசீகரத்தால் ரசிகர்களிடம் புகழ்பெற்றிருந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர், உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.