அப்போது இருந்த அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கு இளையராஜா இசையமைத்தார். எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இசையமைப்பேன் என்று இளையராஜா கூறுவார். ஆனால், அது உண்மை இல்லை.
அவர் கமலுக்கு மட்டும் நல்ல பாடல்களைத் தருவார். இதை நான் முதல்வர் முன்னிலையில் பதிவு செய்கிறேன்.
இளையராஜா மீது விவாதம் இருக்கலாம்… வாதம் இருக்கலாம். ஆனால், தனிமனித தாக்குதல் இருக்கக்கூடாது.
நீதி, நியாயம், கடின உழைப்பு இருந்தால், அனைத்துமே உங்கள் பக்கம் வந்துவிடும். அதைத்தான் இளையராஜா செய்தார்.
இளையராஜாவிற்கு இல்லாத திமிர் வேற யாருக்கு இருக்கும்? இதை வேறு யாராவது ஒத்துக்கொள்வீர்களா? அவர் அதற்கு தகுதியானவர்.
கமல்ஹாசன் நான்கு வரிகளைப் பாடினதும், நான் இவ்வளவு பேசினதும் ஒன்று. இது தான் இசையின் பவர். இளையராஜாவின் சுயசரிதை படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். என்னை விட்டால் நானே திரைக்கதை எழுதிவிடுவேன்” என்று பேசினார்.