இளையஞானி இளையராஜா சினிமா இசை உலகிற்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. இதை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி இளையராஜா பொன்விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் இளையராஜா நேற்று உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.
மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்த இளையராஜா வைர கிரீடத்தையும், தங்க வாளையும் காணிக்கையாக வழங்கியிருக்கிறார்.
இதன் மதிப்பு மொத்தம் சுமார் ரூ.8 கோடி என்று கூறப்படுகிறது. இது முதல்முறையல்ல இதற்கு முன் வைரம் பதித்த ஹஸ்தாவை காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார்.
இதுபோல பலமுறை மூகாம்பிகையை தரிசனம் செய்து காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து , செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “நான் அம்மனுக்கு காணிக்கை கொடுக்கவில்லை, எல்லாம் அம்மன் தந்ததுதான். அதைத் திருப்பிக் கொடுக்கிறேன், அவ்வளவுதான். என்னுடையது என்று ஏதுமில்லை.” என்று பக்தியுடன் பேசியிருக்கிறார்.