இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தை நேரில் சந்தித்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.
இதுதொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உண்மையிலேயே நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.
உங்களுடைய அன்புக்கும், என்னுடைய வேலையைப் பாராட்டிய உங்களுடைய வார்த்தைகளுக்கும் நன்றி. அவை எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
உங்களைப் போன்ற ஒரு மனிதராக இருக்கப் பெரிய மனது வேண்டும் சார்” என்று அல்லு அர்ஜுன் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
அதுபோல, “சிறந்த தோழராகவும், நல்ல மனிதராகவும் இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் சாருக்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.