உயிரைப் பறித்ததா அழகைப் பாதுகாக்கும் மருந்து? ஷெபாலியின் மரணத்தில் போலீஸ் விசாரணை

உயிரைப் பறித்ததா அழகைப் பாதுகாக்கும் மருந்து? ஷெபாலியின் மரணத்தில் போலீஸ் விசாரணை


உயிரைப் பறித்ததா வயது குறைப்பு மருந்து?

ஷெபாலியின் மரணம் குறித்து போலீஸார் கூறுகையில்,”‘ஷெபாலி கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக வயதைக் குறைத்துக்காட்டக்கூடிய மருந்தை எடுத்து வந்துள்ளார். ஷெபாலி வீட்டில் 27ம் தேதி ஏதோ ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான ஷெபாலி விரதம் இருந்துள்ளார். அப்படி இருந்தும் மாலையில் ஷெபாலி வயதை குறைக்கும் ஊசியை போட்டுக்கொண்டுள்ளார். இந்த மருந்துகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாக்டர் பரிந்துரை செய்திருக்கிறார். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இந்த மருந்துகளை ஷெபாலி எடுத்து வந்துள்ளார். விசாரணையில் இந்த மருந்துகள்தான் ஷெபாலியின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் இது குறித்த விபரம் தெரிய வரும்”என்று தெரிவித்தனர். 2002ம் ஆண்டு முதல் முறையாக ஷெபாலி காந்தா லகா என்ற வீடியோ ஆல்பம் வெளியிட்டார். அது பெரிய அளவில் ஹிட்டானது. அதனை தொடர்ந்து முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ, பிக்பாஸ் என அனைத்து துறைகளிலும் ஷெபாலி தடம் பதித்தார். 2021ம் ஆண்டு பிக்பாஸில் பங்கேற்ற சித்தார்த் சுக்லா என்பவரும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *