நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், வெளிச்சத்தையும் மட்டுமே அறிவார்கள். ஆனால், என்னுடைய இந்த சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் என்னுடைய அம்மா இருந்தார்.
அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். இப்போது குட்டி சக நடிகையான என்னுடைய மகள் அந்த இடத்தில் இருக்கிறார். ஒரு மகளாக இருந்ததன் மூலம் நான் நிறைய வலுவடைந்திருக்கிறேன்.