எப்போது ஓய்வு என்ற கேள்விக்கு ஷாருக் கானின் சூடான பதில்!

எப்போது ஓய்வு என்ற கேள்விக்கு ஷாருக் கானின் சூடான பதில்!


ஒரு பயனர், “உங்களுக்கு வயதாகிவிட்டதே… மற்ற இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கலாமே. எப்போது ஓய்வெடுப்பீர்கள்?” என்றார். அதற்கு ஷாருக் கான், “சகோதரரே, உங்கள் கேள்விகள்ல இருக்கும் குழந்தைத் தனத்தை மாற்றி கொஞ்சம் முதிர்ச்சியான கேள்வி கேட்க முடிந்தால் கேளுங்கள். அதுவரை நீங்கள் ஓய்வு பெறுவதுதான் நல்லது.” என்றார்.

ஒரு ரசிகர், “தேசிய விருதை வென்ற பிறகு நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஷாருக் கான்,“ஆமாம்! நான் தேசத்தின் ராஜாவைப் போல உணர்கிறேன்!!! இன்னும் சிறப்பாக செயல்படவும், கடினமாக உழைக்கவும் உத்வேகப்படுத்துகிறது. பொறுப்பும், மரியாதையும் கூடியிருக்கிறது” என்றார்.

ஷாருக் கான்

ஷாருக் கான்

இன்னொரு ரசிகரின் “உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்ன?” என்றக் கேள்விக்கு ஷாருக்கான், “பொழுதுபோக்குக்கான நேரமே இல்லை. பிசியாக மட்டுமே இருக்கிறேன். இடையிடையே கொஞ்சம் புத்தகம் வாசிக்கிறேன். படபிடிப்புக்கான டைலாக்கை ஒத்திகை பார்ப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போது நன்றாக தூங்குவேன்.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *