ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன்.
2023-ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2-வில் இருக்கும் “வீர ராஜா வீரா’ பாடல் பதிப்புரிமை வழக்கை எதிர்கொண்டது.

ஏ.ஆர். ரஹ்மான் மீது என்ன வழக்கு?
கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் டாகர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “வீர ராஜ வீர பாடல் தனது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட சிவ ஸ்துதியை அடிப்படையாகக் கொண்டது.
ஏ.ஆர்.ரஹ்மானின் வீர ராஜா வீர பாடல் வரிகளில் சிவ ஸ்துதியிலிருந்து வேறுபட்டிருக்கலாம், ஆனால் பாடலின் தாளமும் ஒட்டுமொத்த இசை அமைப்பும் எங்களின் குடும்ப இசையமைப்பைப் போலவே இருக்கிறது.
இதன் அசல் பாடல் உலகளவில் ஜூனியர் தாகர் சகோதரர்களால் நிகழ்த்தப்பட்டது, அந்த நேரத்தில் பான் ரெக்கார்ட்ஸாலால் கூட வெளியிடப்பட்டது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.