திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
“சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில் கடந்த 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “இசையுலகில் தமிழுக்கும், தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனிப் பெருமை தேடித் தந்தவர் இசைஞானி.