ஒத்த ஓட்டு முத்தையா: திரை விமர்சனம் | Goundamani Oththa Votu Muthaiya film review

ஒத்த ஓட்டு முத்தையா: திரை விமர்சனம் | Goundamani Oththa Votu Muthaiya film review


ஒரு ஓட்டு வாங்கி தோற்றுப் போன அரசி​யல்​வாதி முத்​தை​யா​வுக்கு (கவுண்​டமணி) மூன்று தங்கைகள். அவர்களை ஒரே வீட்​டில் இருக்​கும் 3 சகோதரர்​களுக்​குத் திரு​மணம் செய்து கொடுக்க நினைக்​கிறார், அவர்.

ஆனால், குணா (வாசன் கார்த்திக்), சத்யா (அன்பு மயில்​சாமி), தேவா (கஜேஸ் நாகேஷ்) ஆகியோரை காதலிக்​கிறார்​கள் தங்கைகள். இதற்​கிடையே இடைத்​தேர்​தலில் கட்சி, தனக்கு சீட் தராத​தால் சுயேச்​சை​யாகப் போட்​டி​யிருக்​கிறார் முத்​தையா. அவர் தேர்​தலில் வென்​றாரா, அவர் நினைத்​தபடி சகோதரி​களுக்​குத் திரு​மணம் செய்து வைத்​தாரா? என்பது கதை.

நீண்ட இடைவெளிக்​குப் பிறகு காமெடி கிங் கவுண்​டமணி நடித்​துள்ளார் என்ப​தால், பார்​வை​யாளர்​களிடையே இந்தப் படத்​துக்கு எதிர்​பார்ப்பு இருந்​தது. ஒரு பக்கம் குடும்பக் கதையாக​வும் இன்னொரு பக்கம் அரசியல் நையாண்​டி​யாக​வும் இயக்​குநர் சாய் ராஜகோபால் கொண்டு சென்​றிருக்​கும் திரைக்கதை, இரண்டு டிராக்​குக்​கும் நியாயம் செய்திருக்க வேண்​டும்.

குடும்பக் கதையில், ஒரே வீட்​டில் இருக்​கும் சகோதரர்​களுக்​குத் தனது தங்கைகளைத் திரு​மணம் செய்​து​கொடுப்​ப​தற்கு கவுண்​டமணி சொல்​லும் காரணம் மிகைப்​படுத்​தப்​பட்ட ஒன்றாகவே இருக்​கிறது. வழக்​கமான கவுண்​டமணி படங்​களில் அரசியல் நையாண்டி ரசிக்க வைக்​கும் என்று நினைத்து இதிலும் எதிர்​பார்த்​தால் அதிலும் ஏமாற்​றமே. தியானம் செய்​வது, தரையில் அடித்து சத்தியம் செய்​வது, வாய்ப்​பில்லை ராஜா என்பது உள்ளிட்ட நிஜ அரசியல் சம்பவங்கள் சிலவற்றை கலாய்த்​திருக்​கும் காட்​சிகள் சிரிக்க வைக்கின்றன. அதே போல, ‘அரசி​யல்ல இதெல்​லாம் சாதாரணமப்பா’ என்பது போன்ற கவுண்​டமணி​யின் வசனங்​களையே அவருக்கு எதிராகப் பேசுவதும் ரசிக்க வைக்​கின்றன.

படத்​தின் மேக்​கிங்​கிலும் காட்சி அமைப்​பிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்​கலாம். கவுண்​டமணியை மட்டுமே நம்பி உருவாகி இருக்​கும் படம் என்ப​தால் மற்றவர்​களுக்​குப் பெரிய முக்​கி​யத்துவம் இல்லை. சித்ரா லட்சுமணன், ரவிமரியா, யோகிபாபு, சிங்​க​முத்து, வையாபுரி, முத்​துக்​காளை, மொட்டை ராஜேந்​திரன் என பல காமெடி நடிகர்கள் இருந்​தா​லும் சிரிப்​புக்​குப் பஞ்சமே.

ஓஏகே சுந்​தர், வாசன் கார்த்திக், அன்பு மயில்​சாமி, கஜேஸ் நாகேஷ் உள்ளிட்ட நடிகர்​கள், கொடுத்த வேலையை செய்திருக்​கிறார்​கள். ராஜா சேதுபதி மற்றும் நோயலின் படத்​தொகுப்பு இன்னும் கச்சிதமாக இருந்​திருக்​கலாம். கொடுத்த வாய்ப்​புக்​குள் காத்​தவ​ராயனின் ஒளிப்​ப​தி​வும் சித்தார்த் விபினின் பின்னணி இசையும் படத்​தைக் காப்​பாற்றப் போராடியிருக்​கிறது.

17397687933068 Thedalweb ஒத்த ஓட்டு முத்தையா: திரை விமர்சனம் | Goundamani Oththa Votu Muthaiya film review

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1351152' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *