1360790 Thedalweb கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @  மே 8 - 14 | Vara Rasi Palan for Kadagam, Simmam, Kanni up to May 8-14

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @  மே 8 – 14 | Vara Rasi Palan for Kadagam, Simmam, Kanni up to May 8-14


கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் – லாப ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம். பணவரவு இருக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்தவாரம் உங்களது பொருளாதார நிலைமை உயரும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும்.

பூசம்: இந்த வாரம் நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும்.

ஆயில்யம்: இந்த வாரம் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

பரிகாரம்: காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் – தொழில் ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தடை தாமதம் நீங்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் சஞ்சாரத்தின் மூலம் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். உணவு கட்டுப்பாடு அவசியம். குடும்ப நிம்மதி குறையக்கூடும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீண் கவலை இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.

பூரம்: இந்த வாரம் எந்த விஷயத்திலும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடருவீர்கள்.

பரிகாரம்: சிவனுக்கு எலுமிச்சம் பழ அபிஷேகம் செய்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். அதே வேளையில் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.

அஸ்தம்: இந்த வாரம் பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: ஐயப்பனை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

17466039413065 Thedalweb கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @  மே 8 - 14 | Vara Rasi Palan for Kadagam, Simmam, Kanni up to May 8-14

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1360790' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *