திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியவில்லை” எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகை அம்பிகா ரிதன்யாவின் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோருக்கு அறுதல் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கண்ணை மூடினாலே இதுதான் எனது மனதிற்கு வருகிறது. அந்தப் பெண் ஓர் உயிர். கொடூரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஆனால் சரியான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் செய்தியைக் கேட்பதற்கே பயமாக இருக்கிறது.