கமல் ஹாசன் உலகநாயகன் பட்டம், தல அஜித் குமார் GBU படம் பற்றி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

கமல் ஹாசன் உலகநாயகன் பட்டம், தல அஜித் குமார் GBU படம் பற்றி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்


தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.

மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய “25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழா நேற்று(மே1)நடைபெற்றது.

இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ் ரவிக்குமார், “கமல் சாரை கடைசியாக அவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் நேரில் பார்த்தேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்குக் காரணம், கமல் சாரையும் ஜெய்ராமையும் நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவும் தான்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல் சார் ஒரு துறையில் இருந்தால் பரவாயில்லை. ஒரு புறம் அரசியல், மறுபுறம் சினிமா, இப்போது புதிதாக  AI வேறு. AI தொழில்நுட்பத்தில் அவர் என்ன கலக்கப் போகிறார் என்று ஆச்சரியமாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அஜித் ஒருமுறை என்னை யாரும் இனிமேல் தல என்று கூப்பிட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அவரது நடிப்பில் இப்போது வெளியாகியுள்ள படம் முழுவதும் அவரைத் தல என்றுதான் கூப்பிடுகிறார்கள்.

அவரும் அந்த படத்துக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். இதை மாற்றவே, முடியாது. அதேபோலத்தான் நீங்களும் உலக நாயகன்னு கூப்பிட வேண்டாம் எனக் கூறுகிறீர்கள்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *