கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு | Kamal Haasan files case seeking permission to release thug life in Karnataka

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு | Kamal Haasan files case seeking permission to release thug life in Karnataka


‘தக் லைஃப்’ இசை வெளி​யீட்டு விழா​வில் பேசிய நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன், ‘‘தமிழில் இருந்து கன்​னடம் பிறந்​தது” என குறிப்​பிட்​டார். இதற்கு கன்னட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து அவருக்கு எதி​ராகப் போராட்​டங்​களில் குதித்​துள்​ளனர். கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதையடுத்து கன்னட கலை மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் தங்​கடகி, ‘‘கமல்​ஹாசனின் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. இதற்​காக அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் அவரின் படத்​தைக் கர்​நாட​கா​வில் தடை செய்​வோம்” எனத் தெரி​வித்​தார். ஆனால் கமல்​ஹாசன், ‘‘நான் எந்த தவறும் செய்​ய​வில்​லை. எனவே மன்​னிப்பு கேட்க மாட்​டேன்” என பதிலளித்​தார்.

இந்​நிலை​யில், கமல்​ஹாசன் தனது தயாரிப்பு நிறு​வன​மான ராஜ்கமல் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் சார்​பில் கர்​நாடக உயர் ​நீ​தி​மன்​றத்​தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்​கல் செய்​தார். அதில், ‘‘கர்​நாட​கா​வில் தக் லைஃப் படத்​தைத் திரை​யிட தடை விதித்​திருப்​பது சட்​டத்​துக்கு எதி​ரானது. எனவே, தடையை நீக்​கி, திரை​யிட அனு​ம​திக்க வேண்​டும். திரையரங்​கங்​களுக்கு போதிய போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு கர்​நாடக அரசுக்​கும், போலீஸுக்​கும்​ உரிய வழி​காட்​டு​தல்​களை வழங்க வேண்​டும்” என முறை​யிட்​டுள்​ளார். இந்த மனு இன்று விசா​ரணைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை தலை​வர் நரசிம்​மலு கூறுகை​யில், ‘‘கமல்​ஹாசனின் வழக்கை சட்​டப்​படி எதிர்​கொள்​வோம். கர்நாடகா​வில் எந்த திரையரங்​கிலும் கமல்​ஹாசனின் படங்​களைத்​ திரை​யிட​மாட்​டோம்​” என்​றார்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1364065' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *