விஷால் நடிப்பில் வெளியான “நான் சிவப்பு மனிதன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு நடிகரான சேத்தன் சீனு நடித்திருக்கும் படம் வள்ளுவன்.
இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் மீசை ராஜேந்திரன், “இந்தப் படத்தின் இயக்குநர் பேசும்போது, இந்த நாட்டுக்கோ, இந்த நாட்டின் மக்களுக்கோ ஒருவன் துரோகம் செய்தால் அவனைக் கொன்றால் கூட அது தர்மம் என்றார்.
அப்படியானால் செப்டம்பர் 27 அன்று நடந்ததற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இந்தப் படத்தின் இயக்குநரை நீண்ட வருடங்களாக தெரியும்.
தமிழில் தலைப்பு வைத்திருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். அந்த 7 நாள்கள் திரைப்படத்தின் இறுதி காட்சியில் பாக்கியராஜ் `என் காதலி உன் மனைவியாகலாம் ஆனால், உன் மனைவி என் காதலியாக முடியாது’ என்பார்.

