தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, பல ஆண்டுகளாகக் கலைக்குச் சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு இன்று (செப். 24) 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கானக் கலைமாமணி விருதுகளை அறிவித்திருக்கிறது.

அந்தவகையில் இன்று அறிவிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பட்டியலில் இயக்குநர் லிங்குசாமி இடம் பிடித்திருக்கிறார்.
கலைமாமணி விருது கிடைத்தது குறித்து இயக்குநர் லிங்குசாமி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.