தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இயக்குநராகத் தனி இடம் பிடித்திருப்பவர் செல்வராகவன்.
இருப்பினும், கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த என்.ஜி.கே, நானே வருவேன் ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அதன்பின்னர், நடிகர் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு டிராக்கை மாற்றிய செல்வராகவன், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிப்பில் அவரை ஹீரோவாக வைத்து `மெண்டல் மனதில்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

செல்வராகவன் படத்தைப் போலவே செல்வராகவன் பட ஆல்பங்களுக்கும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் நிரந்தர இடம் உண்டு.
செல்வராகவன் – யுவன் காம்போ அளவுக்கு செல்வராகவன் – ஜி.வி. பிரகாஷ் குமார் காம்போவும் பெரும் ஹிட்டடித்திருக்கின்றன.
இந்த நிலையில், மெண்டல் மனதில் படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.