காந்தாரா படம் குறித்து சர்ச்சைகுரிய வகையில் வைரலான போஸ்டர் குறித்து பேசியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி Rishabh Shetty speaks out about the controversial poster of the film kantara that went viral

காந்தாரா படம் குறித்து சர்ச்சைகுரிய வகையில் வைரலான போஸ்டர் குறித்து பேசியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி Rishabh Shetty speaks out about the controversial poster of the film kantara that went viral


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செப் 22) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2022-ம் ஆண்டு “காந்தாரா’ படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பையும், வசூலையும் அள்ளியது. இப்போது முந்தையப் படத்தைவிடவும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன.

ரிஷப் ஷெட்டி, வைரலான போஸ்டர்கள்

ரிஷப் ஷெட்டி, வைரலான போஸ்டர்கள்

இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகிய அதேசமயம், இப்படம் தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்தப் போஸ்டரில், “காந்தாரா படத்தைப் பார்க்க வேண்டுமென்றால் இந்த மூன்று விதிமுறைகளை பின்பற்றவும். 1. மது அருந்தக் கூடாது, 2. புகைப்பிடிக்கக் கூடாது, 3. அசைவ உணவை சாப்பிட்டு வந்து பார்க்கக் கூடாது” என்று காந்தாரா படக்குழு அறிவித்தது போல போலியான போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பல்வேறு எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் சமூகவலைதளங்களில் வெடித்தன.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *