‘கைதி 2’ படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினி – கமல் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால் அவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பவன் கல்யாண் படம் என்று ஒரு தகவல் இணையத்தில் உலவி வருகிறது.
ஆனால், ‘கூலி’ படத்துக்கு பின்பு ‘கைதி 2’ படத்தினை இயக்கவே முடிவு செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதற்கு இடையில் தான் ரஜினி – கமல் இணையும் படத்தினை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது மீண்டும் ‘கைதி 2’ படத்தினையே இயக்கிவிட முடிவு செய்திருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளன.
‘கைதி 2’ படத்தினை கேவிஎன் நிறுவனம் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன. தற்போது கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படத்தினை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

