சசிகுமார் நடிப்பில் சத்யசிவா இயக்கியுள்ள ‘ஃப்ரீடம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – இப்படம் இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து பேசுகிறது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. சசிகுமார் இதற்கு முன்பு நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் இதே கதைக்களம்தான் என்றாலும் அது மிகவும் நகைச்சுவையாகவும், ஃபீல் குட் பாணியிலும் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படம் முழுக்க முழுக்க சீரியஸ்தன்மையுடன், இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களின் வலியையும், போராட்டங்களையும் ‘ரா’வாக காட்சிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. ‘ஃப்ரீடம்’ ட்ரெய்லர் வீடியோ: