நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சத்யநாராயணன் நிலை குறித்து விகடனில் செய்தி வெளியானது. இந்தநிலையில்
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மயிலாடுதுறை, நாகை மாவட்ட செயலாளர், ராஜேஸ்வரன்
நமக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ சத்யநாராயணனின் கம்பீரத்தை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். தலைவர் ரஜினி மீது இன்றைக்கும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் சத்யநாராயணன். தலைவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாகப் பேச மாட்டார். அவர் என்ன கேட்டாலும் ரஜினி செய்வதற்குத் தயார், ஆனால் சத்யநாராயணன் எதையும் கேட்க மாட்டார்.