“சிம்பொனி இசை நிகழ்ச்சி இந்த நாட்டின் பெருமை” - லண்டன் புறப்படும் முன் இளையராஜா பேட்டி | Illayaraaja expresses pride over his London symphony program

“சிம்பொனி இசை நிகழ்ச்சி இந்த நாட்டின் பெருமை” – லண்டன் புறப்படும் முன் இளையராஜா பேட்டி | Illayaraaja expresses pride over his London symphony program


சென்னை: “சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று இசையமைப்பாளர் இளையாராஜா தெரிவித்துள்ளார். சிம்பொனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றத்துக்காக லண்டன் செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களுக்கு அளித்தப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரானா இளையராஜா ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டலில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் மார்ச்.8-ம் தேதி அரங்கேற்ற உள்ளார். இதையொட்டி, இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இளையராஜா வீட்டுக்குச் சென்று அவரை நேரில் தனித்தனியாக சந்தித்து ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இளையராஜா வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து நேற்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை, அவருக்கு ‘திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், லண்டன் செல்வதற்காக இன்று (மார்ச்.6) காலை இளையராஜா சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் அளித்தப் பேட்டியில், “சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். ரசிகர்களைப் போல் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று பெருமிதத்துடன் கூறினார். சில கேள்விகளுக்கு, ‘ஒரு நல்ல விஷயத்துக்காகச் செல்கிறேன், தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும்’ என்று கூறினார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1353266' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *