கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் “எஸ்.டி.ஆர்.-49′ படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் ‘வெந்து தணிந்தது காடு’வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்’ என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..
அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் வந்தது எப்படி என பார்க்கலாம். அதாவது இந்த படம் தொடங்குவதற்ௐகு முன்னர், தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘வாடி வாசல்’ படம் உருவாகவிருந்தது. ஆனால், அந்த படத்தின் முன்தயாரிப்பு வேலைகளுக்காக் கால அவகாசம் தேவைப்பட்டதால், உடனடியாக அதை தொடங்கும் திட்டத்தை கைவிட்டனர்.
ஆகையால் தாணுவிற்கு வெற்றிமாறனும், சூர்யாவும் தனித்தனியாக படம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இந்நிலையில் தாணுவிடம் சிலம்பரசனின் கால்ஷீட் இருந்தது. அதே சமயம் சிம்புவிற்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்கும் படம் தொடங்குவதற்கான சூழல் தள்ளிப்போனது. இந்த நிலையில் ‘சிலம்பரசனுடன் ஒரு படம் செய்யலாமா? உங்களுக்கு சம்மதமா, தம்பியிடம் கேட்கலமா?” என வெற்றிமாறனிடம் தாணு கேட்டிருக்கிறார்.