லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார் இப்படம் அந்த காலகட்டத்தில் கடுமையான முறையில் ட்ரோல் செய்யப்பட்டது. மீம் கலாச்சாரம் உருவான ஆரம்பகட்டத்தில் இப்படம் தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகின. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் வரவேற்பை பெறாததால் அதன்பிறகு லிங்குசாமி நான்கு ஆண்டுகள் எந்த படமும் இயக்கவில்லை. 2018ஆம் ஆண்டு விஷால் நடித்த ‘சண்டக்கோழி 2’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது ‘அஞ்சான்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. வரும் நவம்பர் 28 அன்று இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் படம் ரீ-எடிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.