சென்னை: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை (ஜூலை 4) ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் விஜய் இதனை வெகுவாக பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் உடன் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதியும், இயக்குநர் அனல் அரசுவும் உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
Thank you @actorvijay sir.
The last hug, the kind words, the warmth and it meant everything. I’ve always looked up to you, and to feel your support on this journey is something I’ll never forget. #ThalapathyVijay #Phoenix pic.twitter.com/B8t8EWxukO
— Surya sethupathi (@suryaVoffcial) July 3, 2025