ஜாய் கிரிசில்டா விவகாரம் தொடர்பாக முதன்முறையாக மறைமுகமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணரான ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, தொடர்ந்து தனக்கு நீதி வேண்டும் என்று முறையிட்டு வருகிறார். தற்போது ஜாய் கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மாதம்படி ரங்கராஜின் மனைவியான ஸ்ருதி வழக்கறிஞராக இருக்கிறார். ஜாய் கிரிசில்டா விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் ஸ்ருதி ரங்கராஜ், “எனக்கு கருணை காட்டிய அனைவருக்கும் நன்றியுடன் இருக்கிறேன். என் குழந்தையும் நானும் அனுபவித்த போராட்டங்களை அறியாமல் விமர்சித்தவர்களுக்கு, மரியாதையும் பதிலளிக்க கற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு குடும்பமும் உள்ளிருந்தும் மற்றும் வெளியே இருந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அவற்றை ஒன்றாக சமாளிக்கிறோம், ஒற்றுமை என்பது பலம்.
ஒரு வெளிநபர் நுழைந்து சட்டப்பூர்வ மனைவியை விரட்ட தந்திரங்களுடன் விளையாடும்போது, ஒருபோதும் கைவிடாதீர்கள். வலிமை, கண்ணியம் மற்றும் மீள்தன்மையுடன் ஒரே பாதையைத் தாங்கிய அனைத்து சட்டப்பூர்வ மனைவிகளுடன் நான் நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ரங்கராஜ். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

