ஞான சவுந்தரி: படத்தில் இருந்து திடீரென விலகிய பானுமதி! | gnana soundari movie analysis

ஞான சவுந்தரி: படத்தில் இருந்து திடீரென விலகிய பானுமதி! | gnana soundari movie analysis


கிறிஸ்தவ நாட்​டுப்​புறக் கதையை மைய​மாக வைத்து உரு​வான படம் ‘ஞான சவுந்​தரி’. அரசன் தர்​மரின் மகள் ஞான சவுந்​தரி. அவரை கொடுமைப்​படுத்​துகிறார், அவரது சிற்​றன்​னை. ஒரு கட்​டத்​தில் தனது ஆட்​களை அனுப்​பி, ஞான சவுந்​தரியைக் காட்​டுக்​குக் கடத்​திச் சென்று கொன்​று​விடு​மாறு கூறுகிறார். அவர்​கள், ஞான சவுந்​தரி​யின் இரு கைகளை​யும் வெட்டி விட்​டுத் தப்​பிக்​கின்​றனர். உயிருக்​குப் போராடும் அவரை, வேட்​டைக்கு வரும் பக்​கத்து நாட்டு இளவரசன் பிலேந்​திரன் காப்​பாற்​றுகிறான். பிறகு அவரை திரு​மணம் செய்​து​கொள்​கிறான். இயேசு கிறிஸ்து மற்​றும் கன்னி மேரி​யின் ஆசீர்​வாதங்​களு​டன் அவர்​கள் எப்​படி மகிழ்​வாக வாழ்​கிறார்​கள் என்று கதை செல்​லும்.

நவாப் ராஜ​மாணிக்​கம் நடத்​திய மேடை நாடகத்​தைத் தழுவி இந்​தப் படம் உரு​வாக்​கப் பட்​டது. இதே கதையைத் தழுவி ஏ.நா​ராயணன் 1935-ம் ஆண்​டு, ‘ஞான சவுந்​தரி’ என்ற பெயரில் படமாக இயக்​கி​னார். அதில் பி.எஸ். ஸ்ரீனி​வாச ராவ் கதா​நாயக​னாக​வும் சரோஜினி நாயகி​யாக​வும் நடித்​தனர். அதே கதையைக் கொண்டு 13 வருடங்களுக்கு பிறகு உரு​வான இந்த ‘ஞான சவுந்​தரி’​யில் டி.ஆர்​.ம​காலிங்​கம், எம்​.​வி.​ராஜம்​மா, டி.​பாலசுப்​பிரமணி​யம், பி.ஆர்​.மங்​கலம், பி.எஸ்​.சிவ​பாக்​யம், பி.ஜி.வெங்​கடேசன் என பலர் நடித்​தனர்.

எஃப். நாகூர், ஜோசப் தளி​யத் ஜுனியர் ஆகிய இரு​வரும் தயாரித்​து, இயக்​கினர். திரைக்​கதையை, டி.என்​.​ராஜப்பா எழு​தி​னார். ஒளிப்​ப​திவை ஜித்​தின் பானர்​ஜி, செல்​வ​ராஜ் கவனித்​தனர். எஸ்​.​வி.வெங்​கட்​ராமன், எம்​.​ஞானமணி இசை அமைத்​தனர். கம்​ப​தாசன், பாலசுந்தர கவி, பாப​நாசம் சிவன், கே.ஆர்​.​சா​ரங்​க​பாணி, டி.என்​.​ராஜப்​பா, கே.டி.சந்​தானம் பாடல்​கள் எழு​தினர். இதில் ‘அருள் தரும் தேவ​மா​தாவே’ பாடல் சூப்​பர் ஹிட்​டானது.

முதலில் இதில் நாயகி​யாக ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​ட​வர் பானு​ம​தி. முதல் கட்​டப் படப்​பிடிப்பு நடந்த போது பானு​ம​திக்​கும் இயக்​குநர்​களுக்கும் மோதல் ஏற்​பட்​டது. அப்​போது பானு​மதி தெலுங்​கில் முன்​னணி நடிகை​யாக இருந்​தார். பிரச்​சினை காரண​மாக இந்​தப் படத்​தில் இருந்து வில​கி​னார். இதையடுத்து அப்​போது கன்னட நடிகை​யான எம்​.​வி.​ராஜம்​மாவை, நாயகி​யாக நடிக்க வைத்​தனர். அதற்கு முன் தமிழில் அவர், ‘உத்தம புத்​திரன்’, ‘கு​மாஸ்​தா​வின் பெண்’, ‘மதன​காம​ராஜன்’ உள்​ளிட்ட படங்​களில் நடித்​திருந்​தார்.

அவர், டி.ஆர்​.ம​காலிங்​கத்தை விட வயதில் மூத்​தவர். ஆனால், ஒப்​பனைக் கலைஞரின் திறமை​யால் அவரை இளமை​யாகக் காட்​டிய​தாகச் சொல்​வார்​கள். 1948 -ம் ஆண்டு இதே தேதி​யில் வெளி​யான இந்​தப் படம் அப்​போது சிறந்த வரவேற்​பைப் பெற்​றது. இந்த படம் தயாரிக்​கப் பட்​ட​போதே எஸ்.எஸ்​. ​வாசனும் இதே கதையைத் தழுவி இன்​னொரு படத்தை உரு​வாக்​கி​னார்​. பி.கண்ணாம்பா, எம்.கே.ராதா நடித்தனர். 1948-ம் ஆண்டு ஜூனில் வெளியான அந்தப் படம் எதிர்​பார்த்​த வெற்​றியைப்​ பெறவில்​லை.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1362247' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *