தமிழில், ஆடுகளம், காஞ்சனா 2, ஆரம்பம், வை ராஜா வை உள்பட சில படங்களில் நடித்துள்ள டாப்ஸி பன்னு, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’, ‘நாம் ஷாபனா’, ‘தப்பட்’, ஷாருக்கானுடன் நடித்த ‘டுங்கி’ ஆகிய படங்கள் கவனிக்கப்பட்டன. இவர், தனது நீண்ட நாள் காதலரும் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரருமான மத்தியாஸ் போ என்பவரைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர் தனது கணவருடன் டென்மார்க் சென்று விட்டதாகவும் அங்கேயே நிரந்தரமாக குடியேற முடிவு செய்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக செய்தி வெளியானது. ஆனால் இந்த வதந்திகளுக்கு டாப்ஸி முற்றுப்புள்ளி வைத் துள்ளார்.
அச்செய்தியை மறுத்துள்ள அவர், “இதை விட குறைந்த பொய்யுடன் பரபரப்பான தலைப்பு கிடைக்கவில்லையா? கொஞ்சம் ஆராய்ந்து எழுதுங்கள்” என்று கூறியுள்ள அவர், “இந்த ஈரப்பதமான மும்பையில், தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இந்த வதந்தியை வாசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

