தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திப் படத்தை முடித்துவிட்டு, ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது உருவாகவுள்ளது. தனுஷ் உடன் நடிக்கும் இதர நடிகர்கள் ஒப்பந்தமாகிவிட்டாலும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
விக்னேஷ் ராஜா படத்தினை முடித்துவிட்டு, மாரி செல்வராஜ் படத்தை தொடங்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். இதனையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.