தனுஷ் இயக்கிய 'இட்லி கடை' திரைப்படத்தைப் பாராட்டி செல்வராகவன் பதிவு|Selvaraghavan appreciation post for Dhanush's Idli kadai

தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ திரைப்படத்தைப் பாராட்டி செல்வராகவன் பதிவு|Selvaraghavan appreciation post for Dhanush’s Idli kadai


கடந்த வாரம், தனுஷ் எழுதி இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியானது.

அந்தப் படத்தைப் பாராட்டி இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் “இட்லி கடை!

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்றுக் குட்டியும் கண்களைக் கலங்க வைக்கின்றனர்.

நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது!

வாழ்த்துகள் தனுஷ் தம்பி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இட்லி கடை

இட்லி கடை

செல்வராகவன் இந்தப் பதிவில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், இட்லி கடை திரைப்படத்தில் வரும் “எத்தன சாமி’ பாடலும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளார் என்பதும், இந்தப் பாடலுக்கான வரிகளை இயக்குநர் ராஜு முருகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *