ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி.
இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ரூ.1000 கோடி என்ற இலக்கை மட்டும் மனதில் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது.”
நான் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறேன். நாங்கள் “அமரன்’ திரைப்படத்தைத் தயாரிக்கும்போது, அது எவ்வளவு வசூல் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை.
ஒரு படத்தின் தரத்தைத் தவிர, டிக்கெட் விலையைப் போன்ற வேறு சில காரணிகளும் இதில் முக்கியம். நான் டிக்கெட் விலையை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லை.
ஆனால், பெங்களூரு அல்லது மும்பையில் உள்ள டிக்கெட் விலைகள் போல் இங்கே இருந்திருந்தால், ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.800 கோடி அல்லது ரூ.1000 கோடியைக் கூட எளிதாகக் கடந்திருக்கும்.