"தினமும் 10 km முதல் 45 km வரையிலும் கூட நடப்பார். நேரமில்லை என்ற நொண்டிச் சாக்கு அவரிடம் எடுபடாது"- மா. சு குறித்து பார்த்திபன் | parthiban on Ma. Subramanian

“தினமும் 10 km முதல் 45 km வரையிலும் கூட நடப்பார். நேரமில்லை என்ற நொண்டிச் சாக்கு அவரிடம் எடுபடாது”- மா. சு குறித்து பார்த்திபன் | parthiban on Ma. Subramanian


சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனை நேரில் சந்தித்தது குறித்து இயக்குநர் பார்த்திபன் X தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் வெளியிட்டிருக்கும் பதிவில்:
“மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் என் இல்லம் வந்திருந்தார்.

அவர் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புகிறார்; அவர் நடந்து, மற்றவர்களும் நடக்க ஊக்கப்படுத்துவார்.

தினமும் 10 km முதல் 45 km வரையிலும் கூட நடப்பார். ‘நேரமில்லை’ என்ற நொண்டிச் சாக்கு அவரிடம் எடுபடாது.

 பார்த்திபன்

பார்த்திபன்

நொண்டியாவது நடைபயிற்சியை தொடர்வார். கால் புண்னாலும் கூட மழையை கண்டால் மயில் போல உற்சாகத்துடன் இன்னும் சில மைல்கள் கூடுதலாக நடப்பார்.

அவரிடமிருந்து இப்பழக்கத்தைப் பின்பற்றி நடக்க விரும்புகிறேன். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மனநிலையில் பணிபுரிவது அவரிடம் நான் கண்ட சிறப்பு.

ஒவ்வொருவரிடமும் நான் கற்றுக்கொள்ள ஏதோ சில இருக்கத்தான் செய்கின்றன” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *