துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பேச்சினால் நன்மைகள் கிடைக்கும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பண வரத்து திருப்தி தரும். வீண் பழி ஏற்படலாம்.
தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். அரசியல் வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வர வேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியா மாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு பண வரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். அதனால் சில சமயம் விரக்தி ஏற்படலாம். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.
சுவாதி: இந்த வாரம் திட்ட மிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்கு வன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் வர்த்தக திறமை அதிகரிக்கும். பண வரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.
பரிகாரம்: அம்பாளுக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் சனி (வ), ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் – விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண் மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். நிதி பிரச்சனை நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான வாரம். பண வரவு இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும்.
அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். பெண்கள் எதிலும் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். பண வரத்தை அதிகப்படுத்தும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒரு புறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள்.
அனுஷம்: இந்த வாரம் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.
கேட்டை: இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்வீர்கள். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும்.
பரிகாரம்: நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் வீண் பிரச்சனையால் மனக் குழப்பம் ஏற்படும். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக் கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். பெற்றோகள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். கலைத்துறையினருக்கு வாக்குச் சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம்.
அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.
மூலம்: இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம்.
பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பண வரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பண உதவி வந்து சேரும். எதிலும் கவனம் தேவை.
பரிகாரம்: பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மன கஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |