ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது “தேசியத் தலைவர்’ திரைப்படம்.
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை கௌதமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்குநர் பேரரசு, ஆர்.பி உதயகுமார், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாடலாசிரியர் சினேகன், “இந்தப் படம் எடுக்கப்போகிறோம் என முடிவானபோது, என்னிடம் பாடல் எழுத வேண்டும் என அணுகினார்கள்.
அன்றிலிருந்து 3-வது நாள் தேவர் ஜெயந்தி. அதற்குள் ஒருபாடலை எழுதி, இசையமைத்து, பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற சூழல். அதற்கு என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு நன்றி.
நடிகர் பஷீர் தேவராகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படம் பெரும் போராட்டத்துக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும். இந்தப் படமும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.