நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு


நடிகர் கிங் காங் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். ஷங்கர் ஏழுமலை என்ற இவர், கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரிலேயே திரையுலகில் பயணித்து வருகிறார்.

இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதல் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகில் இருக்கும் பலருக்கும் திருமண அழைப்புக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஜூலை 10-ம் தேதியான இன்று காலை கிங்காங் அவர்களின் மகள் கீர்த்தனா பி.காம்., எம்.பி.ஏ., நவீன் பி.காம்., எம்.பி.ஏ ஆகியோரின் திருமணம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் MPK மஹாலில் திருமணம் நடைபெறுகிறது. திரையுலகைச் சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்கள் பலரும் இத்திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவிருகின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *