நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்!


30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் நடித்த மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.

uper good Thedalweb நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!
சூப்பர் குட் சுப்ரமணி

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் செலவுக்காகவும் நடிகர், நடிகைகள், திரைப்பட சங்கம் மற்றும் நண்பர்கள் உதவி வந்தனர். கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 58.

மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள். இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும் என்றும் நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *