பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும், இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கின்றனர்.
ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், “உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. நம் அன்பு நாடான இந்தியாவை தலைமை தாங்க எப்போதும் நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நிலையான வலிமை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்!” என வாழ்த்தி இருக்கிறார்.