"நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த படம் 'பைசன்'; உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி" - வைகோ வாழ்த்து

"நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த படம் 'பைசன்'; உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி" – வைகோ வாழ்த்து


மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘பைசன்’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னப்பட்டு உருவாகியிருக்கிறது ‘பைசன்’.

பைசன் காளமாடன்
பைசன் காளமாடன்

சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் திரைப்படமான இப்படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

அவ்வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோ, ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு மாரிசெல்வராஜை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இது குறித்து மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் வலைதளத்தில், ” ‘நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ்.

நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துக்கள்’ என்று ‘பைசன்’ பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *