நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர் அணி,பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் அண்மையில் பங்கேற்றது.
சில தினங்களுக்கு முன்பு பார்சிலோனாவில் தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் விசில் அடித்து ரகளை செய்ததால் கோபமடைந்த அஜித், அவர்களை நோக்கி விரலை அசைத்து, ‘அமைதியாக இருங்கள்’ என்ற சைகை செய்தார். உடனே ரசிகர்கள் ஆரவாரத்தை நிறுத்தி அமைதியானார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் தன் நெஞ்சில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார். கடவுள் படம் போல தோற்றமளிக்கும் அது உண்மையான டாட்டூதானா? அல்லது அடுத்த படத்துக்காக தற்காலிகமாக வரையப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

