தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.
மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய “25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழா நேற்று (மே1) நடைபெற்றது.
இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ஜெயராம், “ ஏழு, எட்டு வருடங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பிற்காக நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தேன். நான் இப்போது சொல்லப்போவது உண்மையில் நடந்தக்கதை.
காஷ்மீரில் இப்போது தாக்குதல் நடந்த ஏரியா மாதிரியான ஒரு இடத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிதான் அது. இரண்டு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
எனக்கு படப்பிடிப்பு தொடங்காமல் இருந்ததால் மற்றொரு இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். கன்(Gun) ராஜேந்திரன் என்று ஒருத்தர் இருப்பார். சினிமாவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் அவரைத் தெரியும். படத்திற்காக டூப்ளிகேட் கன்(Gun) சப்ளை செய்வார்.