‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பேசில் ஜோசப்.
சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் சில முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. இதில் முன்னணி மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் இணைந்துள்ளார். அவரும் ரவி மோகனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தி திணிப்பை மையப்படுத்தி இப்படத்தினை உருவாக்கி வருகிறார் சுதா கொங்காரா. இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படமாகும். அதுமட்டுமன்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.