பலூசிஸ்தானை தனி நாடாக குறிப்பிட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான்; தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான் | Bollywood actor Salman Khan calls Balochistan a separate state; Pakistan declares him as a terrorist

பலூசிஸ்தானை தனி நாடாக குறிப்பிட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான்; தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான் | Bollywood actor Salman Khan calls Balochistan a separate state; Pakistan declares him as a terrorist


சல்மான் கானின் கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதையடுத்து சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்திருக்கிறது.

பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பட்டியலில் சல்மான் கான் பெயரைச் சேர்த்து இருக்கிறது. அப்பட்டியலில் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தனது கருத்துக்கு சல்மான் கான் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.

பைக்கில் சென்ற சல்மான் கான்

சல்மான் கான் எப்போதும் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார் என்று ஒரு பேச்சு இருக்கிறது. சமீபத்தில் மும்பை கோரேகாவ் திரைப்பட நகரில் நடக்கும் படப்பிடிப்புக்கு சல்மான் கான் தனது காரில் புறப்பட்டார்.

ஆனால் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. இதனால் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சல்மான் கான்

சல்மான் கான்

உடனே சல்மான் கான் அந்த வழியாக வந்த ஒரு வாலிபரிடம் லிப்ட் கேட்டு இரு சக்கர வாகனத்தில் திரைப்பட நகருக்குச் சென்றார். அவரது பாதுகாவலர்கள் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சல்மான் கானைப் பின் தொடர்ந்தனர்.

சல்மான் கான் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக தனது முகத்தை கட்டிக்கொண்டு சென்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *