அவரிடம் பாதியில் நிறுத்திய பெண் பார்க்கச் சென்ற நிகழ்வு குறித்து கேட்டோம். “இந்தத் துறையில நிறைய பெண்கள் என்னைக் காதலிச்சாங்க, நிறைய பேருக்கு என்னைப் பிடிச்சிருந்தது, அதெல்லாம் ஒண்ணொண்ணா கடந்தாச்சு.
‘விட்டா இவன் யாரையாச்சும் கூட்டிட்டு வந்துடுவான்’ அப்படின்னு வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.
வேறொரு பேட்டியில பேசும் போது, ‘என் கணவர் ரஜினி மாதிரி இருக்கறதுனால தான் எனக்கு பிடிச்சது’னு என் மனைவி சொன்னாங்க,” என்றார். பின்பு, “கொரோனா காலத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்ப தான் சிரமப்பட்டேன்.
படம் பண்ணப் போறேன்னு சொன்னேன்ல, அவர் வேலூர்ல இருக்காரு. அவரு எனக்கு ரெண்டு வருஷம், மாசம் மாசம் பத்தாயிரம் ரூபாய் தந்தார். அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரும் நானும் கண்டிப்பா படம் பண்ணுவோம்.
தற்போது பாட்ஷா கெட்அப்பில் உருமாறியவர், தனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர் ஒருவரின் ஆட்டோவை எடுத்து வந்து பேசினார்.
“பாட்ஷா படம் ரிலீஸ் ஆன சமயம் தலைவர் ஆட்டோ ஓட்டுறாரு, நாமளும் ஆட்டோ ஓட்டுவோம்னு ஒரு நாலு வருஷம் ஆட்டோ ஓட்டினேன். அப்போ ஓட்டும் போதும் இதே தலைவர் கெட்அப்ல தான் ஓட்டினேன்.
என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் ஒரு கடவுள். அவரை எப்போ சந்திக்கணும்னு ஒரு டைம் இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு கூட்டத்தோடு கூட்டமா அவரைப் பார்த்து போட்டோ எடுத்துட்டு வர விருப்பமில்லை.