புஷ்கர் – காயத்ரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்தையும் புஷ்கர் – காயத்ரி இணை படம் இயக்கவில்லை. இதனால், இவர்களுடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இடையே ‘சுழல்’ வெப் சீரிஸ் தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.
தற்போது தங்களது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘மதராஸி’, சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படங்களைத் தொடர்ந்து ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.