என்னோட முதல்படம் இவ்வளவு சிறப்பா அமைச்சு கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி.
இந்த படம் பற்றி நிறைய விவாதங்கள் உருவாகியிருக்கு. இதுவரை பேசாத விஷயம் சொல்லி இருக்காங்க… அப்படின்னு.
இது தமிழ்நாடு, இந்த ஸ்டேட்ல நிறைய பெரியவங்க இருந்திருக்காங்க. அந்த பெரியவரும் இருந்திருக்கார். அவங்க வழியிலதான் நாங்கல்லாம் பேசிட்டு இருக்கோம். தமிழ்நாட்டில் இதைப் பேசுவது புதிது இல்லை, இதற்கு முன்னும் பேசியிருக்காங்க. நாங்க அடுத்த தலைமுறைக்கு சொல்லுவோம்.
இதை எவ்வளவு பொழுதுபோக்கா, சினிமா மொழியில, பார்வையாளர்களுக்கு ஏத்துக்கிற மாதிரி, பெரிய ஸ்கேல்ல சொல்ல முடியுமோ அப்படி சொல்ல முயற்சி பண்ணிட்டு இருப்பேன்.” எனப் பேசியுள்ளார்.