மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு, சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சினைகள் தீரும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது.
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்களுக்கு வேலைகளை கவனமாக செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.
திருவோணம்: இந்த வாரம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணபகவானை வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி, ராகு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் – சுக ஸ்தானத்தில் குரு, சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றமும் காண்பீர்கள். சுணக்க நிலையில் இருந்த் காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். மனச்சஞ்சலம் நீங்கும். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.
பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.
சதயம்: இந்த வாரம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்து கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் சுக்கிரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்வீர்கள். எதிலும் சாதகமான நிலை காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல்சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.
உத்திரட்டாதி: இந்த வாரம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக்கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.
ரேவதி: இந்த வாரம் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |